'டான்டீ' மேலாளர் முகத்தில் மிளகாய் பொடி துாவி திருட்டு
'டான்டீ' மேலாளர் முகத்தில் மிளகாய் பொடி துாவி திருட்டு
UPDATED : அக் 27, 2026 07:11 PM
ADDED : அக் 27, 2026 07:03 PM

அ நிறம் | அளவு
பந்தலுார்: அரசு தேயிலை தோட்ட கழக கோட்ட மேலாளர் புஷ்பராணி, 52, என்பவர் முகத்தில், மிளகாய் பொடி துாவி, 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை திருடப்பட்டது.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட கழக மேலாளராக பணியாற்றும் புஷ்பராணி, நேற்று (அக்.,26) இரவு, வேலை முடிந்து சேரம்பாடி சுங்கம் பகுதியில் உள்ள குடியிருப்புக்கு வந்துள்ளார்.
தன் கைப்பையை வைப்பதற்காக, வீட்டில் அறைக்கு சென்றபோது, அங்கு நின்றிருந்த நபரைப் பார்த்து வெளியே ஓடி வந்துள்ளார். பின்னால் துரத்தி வந்த அந்த நபர், புஷ்பராணி முகத்தில் மிளகாய் பொடியை துாவி, அவரது ஐந்தரை சவரன் தங்க செயினை பறித்து தப்பினார். சேரம்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
