மொபைல் போன் சேவை பாதிப்பு :தொடர்பில்லாமல் மக்கள் தவிப்பு
மொபைல் போன் சேவை பாதிப்பு :தொடர்பில்லாமல் மக்கள் தவிப்பு
UPDATED : அக் 27, 2026 09:58 PM
ADDED : அக் 27, 2026 07:04 PM

அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார் மேட்டுப்பாளையம் மலைபாதையில் மின்தடை காரணமாக மக்கள காட்டேரிக்கு நடந்து சென்று மொபைல் சார்ஜ் செய்து வருகின்றனர்.
குன்னுார் மேட்டுப்பாளையம் சுற்றுப்புற பகுதிகளில் கொட்டி தீர்த்த கன மழையால் நிலச் சரிவுகள் ஏற்பட்டது. மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்தடை ஏற்பட்டது. இதனால், வடுகதோட்டம், குறும்பாடி, புதுக்காடு, கோழிக்கரை உள்ளிட்ட கிராம மக்கள் சிரமப்பட்டனர்.
ஏற்கனவே பி.எஸ்.என்.எல்., சேவை மட்டுமே ஓரளவு கிடைத்து. தற்போது தொடரும் மின்தடையால், மொபைல் சார்ஜ் செய்ய முடியாததால் மிகவும் பாதிக்கப்பட்டனர். அதில், வடுக தோட்டத்தை சேர்ந்த மக்கள், பல கி.மீ., நடந்த காட்டேரி பகுதிக்கு சென்று மொபைல் சார்ஜ் செய்து, கொட்டும் மழையில் நடந்து வந்தனர்.
