/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானை; அச்சத்தில் டான்டீ தொழிலாளர்கள்

ADDED : டிச 25, 2025 06:49 AM

கூடலுார்: கூடலுார் பாண்டியார் டான்டீ தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டு யானையால் தொழிலாளர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
கூடலுார் ஓவேலி குண்டம்புழா வனப்பகுதியை ஒட்டி பாண்டியார் டான்டீ தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள குண்டபுழா -புளியாம்பாறை இடையே, இரவு நேரங்களில் காட்டு யானைகள் தேயிலை தோட்டம் வழியாக கடந்து செல்கின்றன.
அவ்வப்போது காட்டு யானைகள், பகல் நேரத்தில் தேயிலை தோட்டத்தில் முகாமிடுவதால், தொழிலாளர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை பாண்டியார் டான்டீ சரகம் எண்-1, தேயிலை தோட்டத்தில் காட்டு யானை முகாமிட்டது. இதனால் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் அதிகாரிகளுக்கு, தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து, வன காவலர் சுப்ரமணி, வேட்டை தடுப்பு காவலர் வாசுதேவன் அப்பகுதிக்கு சென்று, தொழிலாளர்கள் உதவியுடன் யானையை வனப்பகுதிக்குள் விரட்டி கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர்.