/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சூழல் மையத்தில் சகதியால் வழுக்கி விழும் அபாயம்
/
சூழல் மையத்தில் சகதியால் வழுக்கி விழும் அபாயம்
ADDED : செப் 07, 2025 09:00 PM

ஊட்டி; ஊட்டி தலைக்குந்தா சூழல் மையத்தில், சேறும் சகதியும் நிறைந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் வழுக்கி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊட்டி -கூடலுார் சாலையில், தலைக்குந்தா அருகே, பைன் பாரஸ்ட் அமைந்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள எழில் மிகுந்த இப்பகுதியில், சூழல் மையம் அமைந்துள்ளது.
தோடர் பழங்குடியின மக்கள் தாங்கள் தயாரித்த கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட, பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால், சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வானுயர்ந்த பைன் மரங்களின் நடுவே, சேறும் சகதியும் நிறைந்துள்ளது. நடைபாதை வசதி இல்லாததால், செங்குத்தான சோலையின் நடுவே, சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது, மழை பெய்து வரும் நிலையில், சேறும் சகதியும் நிறைந்து காணப்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் வழுக்கி விழுந்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சுற்றுலா பயணிகள் நலன்கருதி, சூழல் மையம் பகுதியில், நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என, வலியுறுத்தப்பட்டுள்ளது.