/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'அபாய பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்': சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அறிவுரை
/
'அபாய பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்': சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அறிவுரை
'அபாய பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்': சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அறிவுரை
'அபாய பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்': சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அறிவுரை
ADDED : டிச 06, 2024 10:56 PM
ஊட்டி; 'நீலகிரியில் அபாயகரமான பகுதிகளை தொடர்ந்து தீவிரமாக கண்காணிப்பதுடன், நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும்,' என, சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.
ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் பருவமழையை ஒட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது.
அதில், மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சங்கர் பேசியதாவது:
நீலகிரியில் பருவ மழையை ஒட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் தங்களது மீட்பு உபகரணங்கள் மற்றும் வாகனங்களுடனும்; உள்ளாட்சி துறையினர் தங்களது மீட்பு பொருட்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
நெடுஞ்சாலை துறையினர் நிலத்தடி மழை நீர் வடிகால்களை தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும். அதேபோல், அபாயகரமான பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். நிவாரண முகாம்களின் சாவிகளை வருவாய் துறை அலுவலர்கள் தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும். மீட்பு உபகரணங்கள் செயல்பாட்டில் உள்ளனவா என்பதை தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.
தேவைப்படும் பட்சத்தில் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நிவாரண முகாம்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். முதல் நிலை பொறுப்பாளர்கள் அவசர காலத்தில் செயல்பட தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் லட்சுமி பவ்யா, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், சப்--கலெக்டர் சங்கீதா, ஊட்டி ஆர்.டி.ஓ., சதீஷ் உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.