தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ ஆபத்தான மரங்கள் அகற்றும் பணி: ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

ஆபத்தான மரங்கள் அகற்றும் பணி: ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

ஆபத்தான மரங்கள் அகற்றும் பணி: ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு


UPDATED : ஜூலை 07, 2026 05:54 PM

ADDED : ஜூலை 07, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2026 05:54 PM ADDED : ஜூலை 07, 2026 05:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுாரில் மரம் விழுந்து ஒருவர் காயமடைந்த நிலையில், அபாய நிலையில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.

குன்னுாரில் கடந்த, 3 நாட்களாக லேசான மழை அவ்வப்போது பெய்த போதும், காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. கோத்தகிரி சாலையில், நேற்று முன்தினம் மரம் விழுந்து முத்துசாமி என்பவர் காயமடைந்தார்.

இந்நிலையில் நடந்த ஆய்வில், சிம்ஸ் பூங்காவில் இருந்து ராணுவ பகுதிக்கு செல்லும் சாலையில் இரு மரங்கள் விழும் அபாய நிலையில் இருந்ததால், காவல்துறையினர் அளித்த புகாரின் பேரில், காலை, 10:30 மணிக்கு தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலை துறையினர் அங்கு வந்தனர். மின் மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்தனர். நெடுஞ்சாலை இடம், சிம்ஸ்பூங்காவில் இருந்து சாய்ந்த விழும் நிலையில் இருந்த இரு மரங்களும் அகற்றப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மதியம், 1:00 மணிக்கு போக்குவரத்து; மின் விநியோகம் சீரானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us