/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எல்லை சாலையோரத்தில் ஆபத்தான மரங்கள்
/
எல்லை சாலையோரத்தில் ஆபத்தான மரங்கள்
ADDED : டிச 17, 2024 09:40 PM

கூடலுார்; தமிழக- கேரளா எல்லையான, கீழ்நாடுகாணி சாலையோரம் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை ஆய்வு செய்து அகற்ற வேண்டும்.
கூடலுார் அருகே, கோழிக்கோடு சாலை நாடுகாணியில் இருந்து, கீழ்நாடுகாணி வழியாக கேரளா நிலம்பூர் சாலை பிரிந்து செல்கிறது. அதில், நாடுகாணி முதல் கீழ்நாடுகாணி வரையிலான, 6 கி.மீ., துாரம் சாலை தமிழ்நாடு பகுதியில் உள்ளது.
இந்த சாலையோரத்தில், சாய்ந்த நிலையில் உள்ள சில மரங்கள் சாலையில் விழுந்து விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
இதனால் வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
ஓட்டுனர்கள் கூறுகையில், 'அரசு அதிகாரிகள் இச்சாலையில் ஆய்வு மேற்கொண்டு ஆபத்தான மரங்களை அடையாளம் கண்டு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.