/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாவரவியல் பூங்காவில் பூத்த 'டிசம்பர் பூக்கள்'
/
தாவரவியல் பூங்காவில் பூத்த 'டிசம்பர் பூக்கள்'
ADDED : ஜன 03, 2024 11:41 PM

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் பனிக்காலத்தில் பூக்கும் டிச., பூக்கள் பூத்துள்ளதால், சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.
ஊட்டி தாவரவியல் பூங்காவில், 250 க்கும் மேற்பட்ட மலர் ரகங்களும், 100க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்களும் உள்ளன. அதில், சில மரங்களில் பூக்கள் மலர்கின்றன. பனிக்காலத்தில் மட்டும் மலரும் 'பவுலோனியா' எனப்படும் டிச., மலர்கள் தற்போது பூத்துள்ளன.
இந்த மரங்கள், ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம் மற்றும் குன்னுார் சிம்ஸ் பூங்கா என, மாவட்டத்தில் மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. தாவரவியல் பூங்காவில் பூத்துள்ள இந்த அழகான மலர்களை, சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுக்களித்து செல்கின்றனர்.