/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின் இணைப்பு கிடைப்பதில் இழுபறி; ரூ.4.96 லட்சம் மதிப்பிலான கிணறு வீண்
/
மின் இணைப்பு கிடைப்பதில் இழுபறி; ரூ.4.96 லட்சம் மதிப்பிலான கிணறு வீண்
மின் இணைப்பு கிடைப்பதில் இழுபறி; ரூ.4.96 லட்சம் மதிப்பிலான கிணறு வீண்
மின் இணைப்பு கிடைப்பதில் இழுபறி; ரூ.4.96 லட்சம் மதிப்பிலான கிணறு வீண்
UPDATED : டிச 12, 2025 09:00 AM
ADDED : டிச 12, 2025 07:02 AM

கூடலுார்: கூடலுார் ஏச்சம் வயல் பகுதியில், மின் இணைப்பு கிடைக்காததால், 2020ம் ஆண்டு, 4.96 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கிணற்றிலிருந்து கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கூடலுார் ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட தேவசம்வயல், மேலம்பளம், குணில் உள்ளிட்ட கிராம மக்கள் குடிநீர் பிரச்னையால் தவித்து வந்தனர்.
இதை தொடர்ந்து, புத்துார்வயல் மகாவிஷ்ணு கோவில் குளத்தின் அருகே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 2020-21 நிதியாண்டில், ஸ்ரீமதுரை ஊராட்சி சார்பில், 4.96 லட்சம் ரூபாய் செலவில் கிணறு மற்றும் அதனை ஒட்டி தண்ணீர் சப்ளை செய்ய மோட்டார் செட்டும் அமைக்கப்பட்டது.
மேலும், இப்பகுதியிலிருந்து தேவசம் வயல் மேலம்பளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்ய குழாய்களும் அமைக்கப்பட்டது.
ஆனால், மோட்டார் செட்டுக்கு இதுவரை மின் இணைப்பு கிடைக்காததால், கிராம மக்கள் கிணறு நீரை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
இதனால், கிணறு மற்றும் மோட்டார் அறை பயனின்றி முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இப்பகுதியை சேர்ந்த ராஜகோபால் கூகையில்,''இப்பகுதியில் கோடையிலும் தடையின்றி தண்ணீர் கிடைத்து வருகிறது. அதன் காரணமாகவே கிராமங்களுக்கு தடையின்றி குடிநீர் சப்ளை செய்ய, இங்கு கிணறு அமைக்கப்பட்டது. பணிகள் முடிந்து, 5 ஆண்டுகள் ஆகியும், மின் இணைப்பு கிடைக்காததால், மோட்டார் இயக்கி கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலை உள்ளது. மாவட்டம் நிர்வாகம் பிரச்னைக்கு தீர்வு கண்டு, கிராமங்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.

