/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாமதமாகும் நடைபாதை சீரமைப்பு பணி; நாள்தோறும் உள்ளூர் மக்கள் அவதி
/
தாமதமாகும் நடைபாதை சீரமைப்பு பணி; நாள்தோறும் உள்ளூர் மக்கள் அவதி
தாமதமாகும் நடைபாதை சீரமைப்பு பணி; நாள்தோறும் உள்ளூர் மக்கள் அவதி
தாமதமாகும் நடைபாதை சீரமைப்பு பணி; நாள்தோறும் உள்ளூர் மக்கள் அவதி
ADDED : ஜன 28, 2026 08:05 AM

கூடலுார்: கூடலுார் தேவர்சோலை சாலையில் போக்குவரத்தை சீரமைக்கவும், மக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல வசதியாக, புதிய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவிலிருந்து சாலையோரம், 100 மீட்டருக்கு கழிவுநீர் கால்வாயுடன் கூடிய நடைபாதை அமைத்துள்ளனர். இம்மாத துவக்கத்தில் நகராட்சி சார்பில் நடைபாதை மற்றும் கால்வாயில் தேங்கியிருந்த மண் அகற்றப்பட்டு, தேங்கிய கழிவுநீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து, சீரமைக்க நடவடிக்கை இன்றி அப்பகுதி திறந்தவெளி கால்வாயாக இருப்பதால் வியாபாரிகள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வி யாபாரிகள் கூறுகையில், 'சீரமைப்பு பணிக்காக அகற்றப்பட்ட, நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் திறந்தவெளி கால்வாயாக காணப்படுகிறது. பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இரவில் இப் பகுதியில் நடந்து செல்பவர்கள் தடுமாறி விழுந்துவிடும் ஆபத்தும் உள்ளது. எனவே, இதனை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.