/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புத்தொழில் திட்டத்தின் கீழ் புத்தாக்க குழு துவக்கம்
/
புத்தொழில் திட்டத்தின் கீழ் புத்தாக்க குழு துவக்கம்
புத்தொழில் திட்டத்தின் கீழ் புத்தாக்க குழு துவக்கம்
புத்தொழில் திட்டத்தின் கீழ் புத்தாக்க குழு துவக்கம்
ADDED : ஜன 28, 2026 08:06 AM
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் புத்தொழில் திட்டத்தின் கீழ், முதல் கிராம புத்தாக்க குழு துவக்கப்பட்டது. கலெக்டர் லட்சுமி பவ்யா திட்டத்தை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிகாரிகள் கூறியதாவது: இந்த திட்டம் கிராமப்புறங்களில் கட்டமைப்பு செய்யப்பட்ட 'ஸ்டார்ட் அப்' வளர்ச்சி ஆதரவுகளை வழங்கி கிராம நகர இடைவெளியை குறைத்து, புதுமை மற்றும் தொழில் முனைவை உருவாக்குகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் தேர்வு செய்யப்படும் தகுதியான 'ஸ்டார்ட்அப்' முன்மாதிரி தயாரிப்பு மற்றும் ஆரம்ப சந்தை அணுகலை விரைவு படுத்த, ஒரு லட்சம் ரூபாய் ஆதார நிதி வழங்கப்படும்.
மாநிலம் முழுவதும் முன்னேற்றத்தை கண்காணிப்பதுடன், சிறந்த நடைமுறைகளை பதிவு செய்யும் மற்றும் விரிவாக்கத்தை ஆதரிக்கும் மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் டேஸ் போர்டு உருவாக்கப்பட உள்ளது.
முதல் கட்டத்தில் குறைந்தபட்சம், 100 அங்கீகரிக்கப்பட்ட கிராம 'ஸ்டார்ட் அப்'கள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் வாயிலாக, உள்ளூர் வேலை வாய்ப்புகள் உருவாகி, நிலையான வளர்ச்சி மேம்படும். நஞ்சநாடு புத்தொழில் குழு கிராமப்புறங்களில் இளம் புதுமையாளர்களை முன்னோக்கி கொண்டு சென்று, தொழில் முனைவு சூழலை உருவாக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்.
இதில், ஸ்டார்ட் அப் சார்பில், காயத்ரி ராஜசேகர், நீலகிரி பழங்குடியினர் பாரம்பரிய மற்றும் கலாசார பாதுகாப்பு சொசைட்டியை சேர்ந்த மணி உட்பட பலர் பங்கேற்றனர்.

