sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீலகிரியின் சிறப்பு தேயிலை துாளுக்கு அதிகரிக்கும் கிராக்கி! சிறு தொழிற்சாலைகளிலும் உற்பத்தி செய்தால் பயன்

/

நீலகிரியின் சிறப்பு தேயிலை துாளுக்கு அதிகரிக்கும் கிராக்கி! சிறு தொழிற்சாலைகளிலும் உற்பத்தி செய்தால் பயன்

நீலகிரியின் சிறப்பு தேயிலை துாளுக்கு அதிகரிக்கும் கிராக்கி! சிறு தொழிற்சாலைகளிலும் உற்பத்தி செய்தால் பயன்

நீலகிரியின் சிறப்பு தேயிலை துாளுக்கு அதிகரிக்கும் கிராக்கி! சிறு தொழிற்சாலைகளிலும் உற்பத்தி செய்தால் பயன்


ADDED : செப் 30, 2025 10:22 PM

Google News

ADDED : செப் 30, 2025 10:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; நீலகிரியில் தயாரிக்கப்படும் சிறப்பு தேயிலை துாள், சர்வதேச அளவில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது; ஏற்றுமதிக்கு வாய்ப்பு உள்ளதால் இதன் உற்பத்தியை அதிகரிக்க அரசு ஊக்குவிப்பு அளிக்க வலியுறுத்தப்படுள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழிலாக தேயிலை துாள் உற்பத்தி உள்ளது. இங்கு, 1.30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பசுந்தேயிலை பயிரிடப்படுகிறது.

அதில், 'சி.டி.சி., ஆர்த்தோடக்ஸ்' ஆகிய ரகங்கள் அதிகம் உற்பத்தி செய்யும் நிலையில், 'கிரீன் டீ, சில்வர் டிப் டீ, ஊலாங் டீ, மூலிகை டீ,' என மதிப்பு கூட்டப்பட்ட சிறப்பு தேயிலை துாள்களும்குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.அதில், உள்ள மேம்பட்ட ஆரோக்கிய நன்மைகள் மற்றும் தனித்துவமான சுவை ஆகியவை சந்தையில் இதற்கு மதிப்பை கூட்டி வருகிறது.

சர்வதேச சந்தையில் சிறப்பு சிறப்பு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு அதிக வருவாயை ஈட்டித் தருவதுடன் பாரம்பரிய தேயிலை விற்பனையுடன் ஒப்பிடும்போது, அதிக லாபம் தரக்கூடியதாக மாறி உள்ளது.

உலகின் இரண்டாவது பெரிய தேயிலை உற்பத்தி நாடாக விளங்கும் இந்தியாவின் தேயிலை சந்தை சர்வதேச அளவில் சிறப்பு பெற்று வருகிறது. அதில், வட அமெரிக்கா, ஐரோப்பியா மற்றும் ஆசிய நாடுகளில் மதிப்புக் கூட்டப்பட்ட சிறப்பு தேயிலை துாள்களுக்கு மதிப்பு அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் உள்ள கிளண்டேல், கேர்பெட்டா, ஆவுக்கல், சாம்ராஜ் உட்பட பல்வேறு எஸ்டேட் நிறுவனங்கள் மதிப்பு கூட்டப்பட்ட சிறப்பு தேயிலை துாளை தயாரித்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில், இந்திய தேயிலை வாரியம் மற்றும் உபாசி சார்பில், கொச்சியில் நடந்த, இந்திய சர்வதேச தேயிலை மாநாட்டில், முதல் முறையாக சிறப்பு தேயிலை துாள்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அதில், விருதுகள் பெற்ற, குன்னுார் பில்லிமலையில் உள்ள அவதா பீவரேஜஸ் நிறுவன மேலாளர் விஜய் சேகர் கூறுகையில்,'' நாட்டில் வெள்ளை, பச்சை மற்றும் மூலிகை கலவையின் புதுமையான பாணியில் தேயிலை துாள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற சிறப்பு செயலால் துாள்களுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு உள்ளது. பல்வேறு விருதுகள் வென்றுள்ளன. ஒரு மொட்டு மற்றும் இரு இலை என்ற தனித்துவமான பசுந்தேயிலையை கொண்டு, சுருட்டிய இலை வடிவலான, 'சுழல் கிரீன் டீக்கு' வெண்களம் விருது கிடைத்தது.

வாள் வடிவ நீளமான பசுந்தேயிலைக்கு பெயர் பெற்ற தனித்துவமான 'லாங்டிங் கிரீன்' டீக்கு வெள்ளி விருது பெற்றது. இந்த அங்கீகாரம், இந்திய சிறப்பு தேயிலைகளுக்கான உலகளாவிய தேவையையும் பிரதிபலிக்கிறது. ஏற்கனவே வட அமெரிக்கவில், 2011ல் லாங்டிங் கிரீன் டீக்கு சர்வதேச விருது கிடைத்தது. 2013ல் வட அமெரிக்கா பெர்முடாவில் நடந்த அமெரிக்க தங்க பதக்க போட்டியிலும் சுழல் கிரீன் டீக்கு ஒட்டுமொத்த விருது பெற்றது,'' என்றார்.

சிறிய தொழிற்சாலை உரிமையாளர்கள் கூறுகையில்,'நீலகிரியில் எஸ்டேட் நிறுவனங்கள் மட்டுமே சிறப்பு தேயிலை தயாரித்து வரும் நிலையில், சிறு தொழிற்சாலைகளிலும் இவற்றை தயாரிக்க ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, சி.டி.சி., ஆர்த்தோடக்ஸ் உள்ளிட்ட தேயிலை துாளுக்கு ஏலம் நடத்துவது போல், சிறப்பு தேயிலை துாள்களுக்கும் ஏலம் நடத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் ஏற்றுமதியை அதிகரிக்க வழிவகை கிடைக்கும்,' என்றனர்.

சிறப்பு தேயிலைக்கு விலை அதிகம்...


நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும், 'கிரீன் டீ, சில்வர் டிப் டீ, ஊலாங் டீ, மூலிகை டீ, ஒயிட் டீ' ஆகியவை வெளிநாடுகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. 'ஒரு கிலோ ஓயிட் டீ- 7500, சில்வர் டிப்ஸ் டீ -10,000 முதல் 25,000, கிரீன் டீ, ஊலாங் டீ, 5000 ரூபாய்,' என, விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டுக்கு, 50 ஆயிரம் கிலோ முதல் ஒரு டன் வரை, மட்டும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தகைய தேயிலை துாள் உற்பத்தியை அதிகரித்தால் விவசாயிகள் பயன் பெறுவர்.








      Dinamalar
      Follow us