/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'எக்ஸ்பிரஸ்' கட்டணம் வசூலித்து விதிமீறல் ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தல்
/
'எக்ஸ்பிரஸ்' கட்டணம் வசூலித்து விதிமீறல் ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தல்
'எக்ஸ்பிரஸ்' கட்டணம் வசூலித்து விதிமீறல் ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தல்
'எக்ஸ்பிரஸ்' கட்டணம் வசூலித்து விதிமீறல் ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தல்
ADDED : நவ 22, 2024 11:23 PM
குன்னுார்: 'நீலகிரி மாவட்ட அரசு பஸ்களில், 'எக்ஸ்பிரஸ்' கட்டணம் வசூலிப்பதை தடுத்து, ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், நீலகிரி மாவட்டத்தில் முதன் முதலில் பஸ்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதால், அரசு பஸ்கள் மட்டும் முழுவதும் இயங்கி வருகின்றன. மாவட்டத்தில் தற்போது, 335 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த, 2018ம் ஆண்டு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட போது, மலை பகுதிகளில், 20 சதவீதம் கூடுதல் கட்டணமும் நிர்ணயித்து வசூலிக்கப்படுகிறது. 80 கி.மீ., துாரம் வரை செல்லும் பஸ்களில் 'எக்ஸ்பிரஸ்' கட்டணம் பெயரில், அனுமதியின்றி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ரத்து செய்ய பொதுநல வழக்கு
இத்தகைய சட்டவிரோத கட்டண வசூலை ரத்து செய்யகோரி, பல போராட்டங்களை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. தொடர்ந்து, இந்த கட்டண உயர்வை தடை செய்ய கோரி, குன்னுாரை சேர்ந்த மனோகரன், சென்னை ஐகோர்ட்டில், 2019ம் ஆண்டு பொதுநல வழக்கு தொடுத்தார்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, கடந்த பிப், 23ல் வழங்கிய தீர்ப்பில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பஸ்களின் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து துறைக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால், அரசு போக்குவரத்து கழகம் தொடர்ந்து எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலித்து வருகிறது. இந்நிலையில், ஐகோர்ட் உத்தரவை செயல்படுத்த வலியுறுத்தி, மனோகரன் தலைமையில், ரமணி, ஆல்தொரை, தர்மசீலன் உள்ளிட்ட குழுவினர், மனு நீதிநாளில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மனோகரன் கூறுகையில்,''ஏற்கனவே நீலகிரியில் அனைத்து பஸ்களுக்கும் சாதாரண கட்டணம் நிர்ணயம் செய்து, மாவட்ட போக்குவரத்து ஆணையம் அங்கீகரித்துள்ளது. ஆனால் அரசு போக்குவரத்துக் கழகம் இதனை மறைத்து, விரைவு கட்டணம் என்ற பெயரில் மக்களை சுரண்டி வருகிறது.
வட்டார போக்குவரத்து அலுவலர், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் அபராதம் விதித்து மட்டுமே வருகிறார். எனவே, மாவட்ட நிர்வாகம், சென்னை ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்தி எக்ஸ்பிரஸ் கட்டணத்தை ரத்து செய்து, சாதாரண கட்டணம் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் வலியுறுத்தினோம்.
அப்போது, போக்குவரத்து கழக பொது மேலாளர், வட்டார போக்குவரத்து அலுவலரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்,'' என்றார்.