/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடநாடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு
/
கோடநாடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு
ADDED : நவ 13, 2025 08:18 PM
கோத்தகிரி: கோத்திகிரி கோடநாடு பகுதியில், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், டெங்கு காய்ச்சலை, முழுமையாக தடுக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை சார்பில், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திக்கு உட்பட்ட, கோடநாடு சுற்றுவட்டார கிராமங்களில், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், குக்கிராமங்களுக்கு சென்று, டெங்கு காய்ச்சலின் அபாயம் மற்றும் பாதுகாப்பு முறை குறித்து, பொது மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
குடியிருப்பு சுற்றுப்புற பகுதிகளில், கழிவு நீர் தேங்காம ல் துாய்மையாக வைக்கவும், பழைய டயர் மற்றும் தேங்காய் முடிகளை குடியிருப்பு பகுதியில் வைக்காமலும், சுகாதாரமான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை காய்ச்சி குடிக்க வலியுறுத்தியும் பணியா ளர்கள் விழிப்பு ணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

