/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பேரிளம் பெண்களுக்கான கருத்தரங்கு திட்டங்கள் குறித்து விளக்கம்
/
பேரிளம் பெண்களுக்கான கருத்தரங்கு திட்டங்கள் குறித்து விளக்கம்
பேரிளம் பெண்களுக்கான கருத்தரங்கு திட்டங்கள் குறித்து விளக்கம்
பேரிளம் பெண்களுக்கான கருத்தரங்கு திட்டங்கள் குறித்து விளக்கம்
ADDED : அக் 17, 2024 10:03 PM
ஊட்டி : ஊட்டியில் பேரிளம் பெண்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது.
ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் தமிழ்நாடு கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இக்கருத்தரங்கில், 'கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் மகளிர் நலவாரியத்தின் செயல்பாடுகள், சமூக நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அரசின் மூலம் செயல்படுத்தப்படும் பிற திட்டங்கள், சொத்துரிமை பெண்களுக்கான சட்டங்கள், இலவச சட்ட உதவி குறித்தான தகவல்கள், குடும்ப வன்முறைகளிலிருந்து உரிய பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய திட்டங்கள்,' குறித்து தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு கைம் பெண்கள், ஆதரவற்றோர் மகளிர் நலவாரியத்தின் உறுப்பினராக பதிவு செய்த பெண்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மகளிர் திட்ட இயக்குனர் காசிநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணாதேவி, மாவட்ட செயல் அலுவலர் (வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) வசந்த், இலவச சட்ட உதவி மைய வக்கீல் ஸ்ருதி உட்பட பலர் பங்கேற்றனர்.