/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெறிச்சோடி காணப்பட்ட வெலிங்டன் ஏரி பூங்கா
/
வெறிச்சோடி காணப்பட்ட வெலிங்டன் ஏரி பூங்கா
ADDED : அக் 17, 2024 10:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார் : மழையின் காரணமாக, வெலிங்டன் படகு இல்ல ஏரி, சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
குன்னுாரில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்த நிலையில், வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய படகு இல்ல ஏரி பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. படகுகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதே போல, லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் பகுதிகளில் கடும் மேகமூட்டமும் அவ்வப்போது நிலவுவதால் இயற்கை காட்சிகளை ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி செல்கின்றனர்.