/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மனைவி பிரிந்து சென்ற விரக்தி போலீஸ்காரர் தற்கொலை
/
மனைவி பிரிந்து சென்ற விரக்தி போலீஸ்காரர் தற்கொலை
ADDED : மார் 05, 2024 12:37 AM
மஞ்சூர்;ஊட்டி அருகே, பெண்ணை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில் கைதான போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.
மஞ்சூர் அருகே அணிக்காடு பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன், இவருடைய மனைவி சசிகலா, 25, இவர்களுக்கு, 7 வயது மற்றும் 5 வயதில் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
சசிகலாவுக்கும், ஊட்டியில் போக்குவரத்து போலீஸ்காரராக பணியாற்றிய கண்ணன், 25, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சசிகலாவை திருமணம் செய்வதாக கூறிய கண்ணன் நெருங்கி பழகியுள்ளார்.
இந்நிலையில், திருமணம் செய்ய மறுத்த கண்ணன், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்த சசிகலா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இவ்வழக்கில போலீஸ்காரர் கண்ணன் கைது செய்யப்பட்டதை அடுத்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
ஜாமினில் வெளியே வந்த கண்ணன், தனது மனைவி பிரிந்து சென்ற விரக்தியில், நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

