ADDED : ஏப் 11, 2026 04:26 AM

அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழாவின் ஒரு பகுதியாக சித்தி விநாயகர் கோவில் தெரு, பொதுமக்கள் சார்பில் கரக ஊர்வலம் மற்றும் தீச்சட்டி ஊர்வலம் நடந்தது.
குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று சித்தி விநாயகர் கோவில் தெரு, பொதுமக்கள் சார்பில் கரக உற்சவம் மற்றும் தீச்சட்டி ஊர்வலம் நடந்தது. விழாவில் பக்தர்கள் பலரும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சித்தி விநாயகர் கோவில், தீயணைப்பு நிலைய கோவிலில் துவங்கிய இந்த ஊர்வலம் எம்.ஜி.ஆர்., நகர் கிருஷ்ணாபுரம் மவுண்ட் ரோடு வழியாக தந்தி மாரியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
