/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காந்தள் மூவுலகரசியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
/
காந்தள் மூவுலகரசியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
காந்தள் மூவுலகரசியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
காந்தள் மூவுலகரசியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
ADDED : பிப் 03, 2025 07:25 AM

ஊட்டி : ஊட்டி காந்தள் மூவுலகரசியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
ஊட்டி காந்தள் பகுதியில் பிரசித்தி பெற்ற மூவுலகரசியம்மன் கோவில் உள்ளது. 500 ஆண்டு பழமையான இக்கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை, கோவில் கமிட்டியினர் நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி, கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கோபுரங்கள் வர்ணம் பூசி பொலிவுபடுத்தப்பட்டது.
முதற்கால யாக வேள்வி
தொடர்ந்து, மஹா கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த, 31ம் தேதி மூத்த பிள்ளையார் வழிபாடு; துாய நீராக்கல், கணபதி வேள்வி, லக்ஷ்மி வேள்வி, நவக்கோள் நிறையர் ஹுதி,பேரொளி வழிபாடு, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.
மாலையில் காந்தள் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து விமான கலசங்கள், புனிதநீர் குடங்கள், மங்கள பொருட்கள் ஊர்வலம் நடந்தது. பின், முதற்கால யாக வேள்வி, மூல மந்திர வேள்வி நிறையா ஹுதி பேரொளி வெளிப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இம்மாதம், 1ம் தேதி, 10:35 மணி முதல் மூத்த பிள்ளையார் வழிபாடு, இரண்டாம் கால யாகவேள்வி, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.
கும்பாபிஷேகம் நிகழ்ச்சி
நேற்று காலை, 5:00 மணி முதல் மூத்த பிள்ளையார் வழிப்பாடு, துாய நீராக்கல், நான்கு மறை அதிபதி ஆன இறைவிக்கு நான்காம் காலயாக வேள்வி நிகழ்ச்சி நடந்தது. மேலும், மூல திருமேனிக்கு நாடி மூலம் இறை ஆற்றல் செலுத்துதல் நிறையா ஹுதி மலர் அர்ச்சனை நிகழ்ச்சிகள் நடந்தது.
பின், 7:00 மணிக்கு புனித நீர் குடங்கள் வேள்வி சாலையிலிருந்து எழுந்தருள செய்து கோவில் வலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. 7:15 மணிக்கு மூவுலகரசியம்மன் விமானம் மற்றும் பரிகார விமானங்கள் பெருஞ்சாந்தி மஹா கும்பாபிஷேகம், குருக்கள் விஜயஆனந்த் தலைமையில் நடந்தது. செயல் அலவலர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார்.
7:45 மணிக்கு மூவுலகரசிக்கு பெருந்திருமஞ்சனம் (மகா அபிஷேகம்) திருமேனி அலங்கரித்தல், பதின் மங்கல காட்சிகள், பேரொளி வழிபாடு மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. 11:00 மணிக்கு அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 4:00 மணிக்கு திருவீதி உலா காட்சி நடந்தது.
நிகழ்ச்சியில், ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.