/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாரியம்மன் கோவில் திருவிழா பூ குண்டம் இறங்கிய பக்தர்கள்
/
மாரியம்மன் கோவில் திருவிழா பூ குண்டம் இறங்கிய பக்தர்கள்
மாரியம்மன் கோவில் திருவிழா பூ குண்டம் இறங்கிய பக்தர்கள்
மாரியம்மன் கோவில் திருவிழா பூ குண்டம் இறங்கிய பக்தர்கள்
ADDED : ஏப் 27, 2025 09:26 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே பொன்னானி மகா ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வருடாந்திர திருவிழா கடந்த, 25-ம் தேதி காலை மகா கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், காப்பு கட்டுதல், உச்ச கால பூஜை நடந்தது.
சிறுவர்களின் கலை நிகழ்ச்சியும், ஆற்றங்கரைக்கு சென்று அம்மனை குடியழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, 26-ம் தேதி அபிஷேக ஆராதனை, அலங்கார பூஜை, ஆற்றங்கரையில் பறவை காவடி, வேல் காவடி, பால்குடம் ஊர்வலமும், பூ குண்டம் இறங்குதலும் நடந்தது. பூ குண்டத்தில் சிறுமியர் பலரும் பக்தியுடன் பூ குண்டம் இறங்கினர். தொடர்ந்து தேர்பவனி, வானவேடிக்கை நடந்தது.
நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகள், நீர் வெட்டுதல், மாவிளக்கு பூஜை, அம்மன் கரகம் ஊர்வலம், குடிவிடுதலுடன் விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், கோவில் கமிட்டியினர், மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.