/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்த நடைபாதை நடந்து செல்ல சிரமம்
/
சேதமடைந்த நடைபாதை நடந்து செல்ல சிரமம்
ADDED : செப் 07, 2025 08:59 PM

கோத்தகிரி; கோத்தகிரி கட்டபெட்டு பஜார் -குன்னுார் பஸ் நிறுத்தம் இடையே, நடைப்பாதை சேதம் அடைந்துள்ளதால், மக்கள் நடந்து செல்ல சிரமம் அதிகரித்துள்ளது.
ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட நடைபாதையின் இருப்புறங்களிலும், ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளன. ஓரத்தில் கழிவுநீர் கால்வாய் மூடப்படாமல் உள்ளது. இதனால், குறுகலான நடைபாதையில் மக்கள் சென்று வருகின்றனர்.
நடைபாதையின் நடுவில், கான்ரீட் பெயர்ந்து குழிகள் ஏற்பட்டுள்ளதால், நடந்து செல்வோர் தடுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர். கட்டபெட்டு பஜாரை கடந்து, நடுஹட்டி தொலட்டி மற்றும் ஒன்னோரை உட்பட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர். தவிர, பள்ளி கலலுாரி மாணவர்களும் சென்று வருகின்றனர். எனவே, பகுதி மக்கள் நலன் கருதி, ஜெகதளா பேரூராட்சி நிர்வாகம், நடைபாதையை சீரமைப்பதுடன், கழிவு நீர் கால்வாயை 'சிலேப்' அமைத்து மூட வலியுறுத்தப்பட்டுள்ளது.