/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலையில் மேக மூட்டமாக காலநிலை நிலவுவதால் சிரமம்
/
மலையில் மேக மூட்டமாக காலநிலை நிலவுவதால் சிரமம்
ADDED : ஆக 03, 2025 08:33 PM

குன்னுார்; குன்னுாரில் மேகமூ ட்டத்துடன் கூடிய காலநிலை நிலவுவதால் வாகனம் இயக்க சிரமம் ஏற்பட்டுள்ளது.
குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த சில நாட்களாக, இதமான கால நிலை நிலவுகிறது. கடந்த இரண்டு நாட்களாக வெயில், மேகமூட்டம், மழை என மாறுபட்ட கால நிலை நிலவுகிறது. அதில், குன்னுார்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில், மேகமூட்டம் நிலவுவதால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
சிம்ஸ் பார்க், லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் சுற்றுலா மையங்களில் மேகமூட்டம் இடையே செல்பி, புகைபடம் எடுக்க சுற்றுலா பயணியர் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இதேபோல, பந்தலுார் பகுதியில் நேற்று மதியம் கடும் மேகமூட்டம் நிலவியது. இதனால், குளிராக காலநிலை நிலவியது.