/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'டிஜிட்டல் லைப்' சான்றிதழ் பிரசார முகாம்; ஓய்வூதியர்களுக்கு அழைப்பு
/
'டிஜிட்டல் லைப்' சான்றிதழ் பிரசார முகாம்; ஓய்வூதியர்களுக்கு அழைப்பு
'டிஜிட்டல் லைப்' சான்றிதழ் பிரசார முகாம்; ஓய்வூதியர்களுக்கு அழைப்பு
'டிஜிட்டல் லைப்' சான்றிதழ் பிரசார முகாம்; ஓய்வூதியர்களுக்கு அழைப்பு
ADDED : நவ 07, 2024 08:10 PM

குன்னுார் ; குன்னுார் வெலிங்டன் ராணுவ மையம் அருகே, இந்திய பாதுகாப்பு கணக்கு சேவையின், பண கணக்கு அலுவலகத்தில் ஓய்வூதியர்களுக்கான, 3வது 'டிஜிட்டல் லைப்' சான்றிதழ் பிரசார முகாம் துவங்கியது.
மத்திய அரசின் சார்பில், ஓய்வூதியர்களுக்காக நாடு முழுவதும் நவ., 30 வரை, 3வது டிஜிட்டல் லைப் சான்றிதழ் பிரசார முகாம் நடந்து வருகிறது.
அதில், குன்னுார் வெலிங்டன் ராணுவ மையம் பகுதியில் அமைந்துள்ள, இந்திய பாதுகாப்பு கணக்கு சேவையின், பண கணக்கு அலுவலகத்தில், பிரசார முகாம் துவங்கியது.
இதனை, இந்திய பாதுகாப்பு கணக்கு சேவை அசிஸ்டன்ட் கண்ட்ரோல் ஆப் டிபன்ஸ் அக்கவுண்ட்ஸ் அலுவலர் சீனிவாச ரெட்டி துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை முதுநிலை கணக்கு அதிகாரிகள் பாபி அகஸ்டின், பிஜு, ஆடிட்டர் உதயகுமார் உட்பட பலர் செய்து வருகின்றனர்.
அதிகாரிகள் கூறுகையில்,'ஓய்வூதியம் பெறுவோருக்கு, ஓய்வூதியம் தொடர்வதற்காக ஆண்டுதோறும் நவ., மாதத்தில் வாழ்க்கை சான்றிதழ் எனப்படும் 'லைப் சர்டிபிகேட்' சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.
அதில், இந்த ஆண்டு முக அங்கீகார தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டு முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தடையற்ற மற்றும் வசதியாக மாற்ற இவை பதிவு செய்யப்பட்டு வருகிறது.
எனவே, ஓய்வூதியம் பெரும் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்,' என்றனர்.

