ADDED : நவ 12, 2024 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி; ஊட்டி அருகே காட்டு குப்பையில் குந்தா நீரேற்று மின் திட்ட பணிக்காக நேற்று முன்தினம் எமரால்டு அணை திறக்கப்பட்டது. வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மாத காலத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. எமரால்டு அணையில் திறக்கப்படும் தண்ணீர் நீரோடை வழியாக குந்தா அணைக்கு செல்கிறது. நீரோடை வழித்தடத்தில் சிலர், வருவாய் மற்றும் மின்வாரியத்திற்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து மலை காய்கறி பயிரிட்டுள்ளனர். சிலர் கட்டடங்கள் கட்டி உள்ளனர். இந்நிலையில், வெள்ளம் வெளியேறி வருவதால், ஒரு ஆக்கிரமிப்பு கட்டடம் இடிந்துள்ளது.
அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. அப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.