sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஆதிவாசிகளுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம்

/

ஆதிவாசிகளுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம்

ஆதிவாசிகளுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம்

ஆதிவாசிகளுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம்


ADDED : ஆக 25, 2011 01:52 AM

Google News

ADDED : ஆக 25, 2011 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : 'தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்,' என ஆதிவாசிகள் மக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் சோலூர்மட்டம் மெட்டுக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இருளர் இனத்தை சேர்ந்த இவர் கடந்த 17ம் தேதி தனது மனைவி வசந்தா வுடன் கரிக்கையூர் கிராமத்துக்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்த போது, அப்பகுதியை சேர்ந்த ஒருவர், தகாத வார்த்தைகளால் திட்டியும், தாக்கியும் உள்ளார். இருவரும் பஸ்சில் ஏறி அமர்ந்திருந்த போதும் பலரால் தாக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சுப்ரமணி போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால், புகாரை கோத்தகிரி போலீசார் ஏற்க மறுத்துள்ளனர். சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சென்ற போது, 'போலீசார் அனுமதி கடிதம் இருந்தால் தான் சிகிச்சைக்கு அனுமதிக்க முடியும்,' என டாக்டர்கள் கூறியுள்ளனர். பின் 'புகாரை ஏற்று கொள்ள வேண்டும்,' என வலியுறுத்தி, ஆதிவாசி மக்கள் கோத்தகிரி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டுள்ளனர். இதன் பின், சுப்ரமணியிடம் போலீசார் புகார் பெற்றனர். இந்நிலையில்,'போலீசார் தான் கொடுத்த புகாரை கிழித்து, அவர்கள் வேறு விதமாக எழுதி தன்னிடம் கையெழுத்து பெற்றனர்,' என சுப்ரமணி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, அப்பகுதி மக்களுடன் வந்து, நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கிடம் சுப்ரமணி நேற்று மனு அளித்தார். அதில்,' ஆதிவாசிகளான தங்களை தகாத வார்த்தைகளில் திட்டி,தாக்கியவர்கள் மீது, புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை;இதனால்,தனது குடும்பத்தாருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பாதுகாப்பு அளிப்பதுடன், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என வலியுறுத்தி உள்ளார். இந்த மனு மீது விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us