/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாநில எல்லையில் புவியியல் ஆய்வு அவசரம்
/
மாநில எல்லையில் புவியியல் ஆய்வு அவசரம்
ADDED : செப் 04, 2011 10:52 PM
கூடலூர் : 'கூடலூர் கீழ்நாடுகாணி சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு, சாலை
வெடிப்பு குறித்து மாநில அரசு ஆய்வு செய்ய வேண்டும்,' என
வலியுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவாலா பகுதியில் கடந்த
வாரம் பெய்த கன மழையில் நாடுகாணி சாலையில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்
சரிவு ஏற்பட்டும், மரம் விழுந்தும் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.கடந்த
28ம் தேதி அண்ணாநகர் பாப்சன் பகுதியில் சாலையில் 80 மீட்டர் தூரம் பிளவு
ஏற்பட்டது.
இதனை நெடுஞ்சாலை துறையினர் தற்காலிகமாக சீரமைத்துள்ளனர்.தமிழக -
கேரளா எல்லையில் ஏற்பட்ட நிலச்சரிவு பகுதியை கேரளா மாநில புவியியல் ஆய்வு
துறையை சார்ந்த டாக்டர் சஜின், சுந்தர்ராஜன் கடந்த 1ம் தேதி நேரில் ஆய்வு
செய்தனர். ஆனால், தமிழகத்தின் சார்பில் ஒரு அலுவலர் கூட இப்பகுதியை
பார்வையிடவில்லை. இதனால், இப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்'மக்களின்
அச்சத்தை போக்கும் வகையில், இப்பகுதிகளை சென்னையிலுள்ள மத்திய புவியியல்
துறையினர் நேரில் ஆய்வு செய்து, இதன் உண்மை நிலை குறித்தும், மேற்கொள்ள
வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும்,' தெளிவு படுத்த வேண்டும் என
கீழ் நாணி சுற்றுப்புற கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துனர்.