நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : நீலகிரி மாவட்ட மதசார்பற்ற ஜனதா தள கட்சி மாவட்ட கூட்டம், கட்சி
அலுவலகமான ஊட்டி காமராஜ்பவனில் நடந்தது.
கூட்டத்தில், ஊழலுக்கு எதிராக
போராடிய அன்னாஹசாரேவின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிப்பது; உரம், விவசாய
இடுபொருட்களின் விலையை குறைத்து வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் ராஜரத்தினம் வரவேற்றார்.
மாவட்ட தலைவர் விஸ்வநாதன் தலை மை வகித்தார். தேசீய குழு உறுப்பினர்
கேவல்சந்த், மாவட்ட உபதலைவர் பீமன், ஊட்டி நகரமன்ற உறுப்பினர் சுஞ்சையா,
ஊட்டி நகர தலைவர் சுகுமாரன் உட்பட பலர் பங்கேற்றனர். நகர செயலாளர்
ராஜேந்திரன் நன்றி கூறினார்.

