sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பட்டு புழு வளர்ப்புக்கு ரூ.1.30 லட்சம் மானியம்

/

பட்டு புழு வளர்ப்புக்கு ரூ.1.30 லட்சம் மானியம்

பட்டு புழு வளர்ப்புக்கு ரூ.1.30 லட்சம் மானியம்

பட்டு புழு வளர்ப்புக்கு ரூ.1.30 லட்சம் மானியம்


ADDED : செப் 07, 2011 12:54 AM

Google News

ADDED : செப் 07, 2011 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர் : தமிழக பட்டு வளர்ச்சி துறையின் கிரியா உக்கி திட்டத்தின் கீழ், சுய உதவி குழுக்களுக்கு பட்டு புழு வளர்ப்பு ஊக்குவிப்பு குறித்த பயிற்சி கூட்டம் புனித மரியன்னை பள்ளியில் நடந்தது.

உதவி ஆய்வாளர் லிங்கராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில், பட்டு வளர்ப்பு துறை மண்டல இணை இயக்குனர் (பொ) சந்திரசேகரன் பேசுகையில், ''பட்டு வளர்ப்பு விவசாய சார்ந்த தொழிலாக இருப்பதால் இதில் கிராம பகுதி மக்கள் ஈடுபட வேண்டும். 600 சதுர அடி பரப்பிலான செட் இருந்தால் பட்டு வளர்க்க முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் 5,000 மல்பரி செடிகள் நடவு செய்து, அதனை மூன்று பிரிவாக பிரித்து மாதம் மூன்று முறை வருமானம் பெறலாம். ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கும். இந்தியாவில் ஆண்டுக்கு 26 மெட்ரிக் டன் பட்டு தேவையுள்ளது. இதனை பூர்த்தி செய்ய முடியாததால் சீனாவிலிருந்து பட்டு இறக்குமதி செய்யப்படுகிறது. தேவை அதிகம் இருப்பதால் பட்டுக்கு விலை குறையும் என்ற கவலைப்பட தேவையில்லை. விவசாயிகள் விரைவாக முன்னேற இத்தொழில் பெரும் உதவியாக இருக்கும். பட்டு வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு 1.30 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்குகிறது,'' என்றார். கூடலூர் சிண்டிகேட் வங்கி கிளை மேலாளர் கணேசன் பேசுகையில் , ''பட்டு வளர்ப்பு தொழில் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இம்முயற்சிக்கு தேவையான கடனுதவி வழங்கப்படும்,'' என்றார். கூட்டத்தில், உடுமலை பகுதி உதவி இயக்குனர் பன்னீர்செல்வம், ஆய்வா ளர்கள் பிரின்ஸ் மோகன் (மசகல்) ராஜமாணிக்கம் (மசினகுடி), யு.எஸ்.எஸ். ஏ., சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர் பாக்கியவதி சுய உதவி குழு பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். பட்டு வளர்ப்பு தொழில் நுட்ப உதவியாளர் இஜாஸ் நன்றி கிறினார்.






      Dinamalar
      Follow us