sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அடகு கடைகளில் அனைத்து வசதிகளும் அவசியம்

/

அடகு கடைகளில் அனைத்து வசதிகளும் அவசியம்

அடகு கடைகளில் அனைத்து வசதிகளும் அவசியம்

அடகு கடைகளில் அனைத்து வசதிகளும் அவசியம்


ADDED : அக் 12, 2011 02:59 AM

Google News

ADDED : அக் 12, 2011 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : 'அடகு கடை உரிமையாளர்கள் தங்களது உடமைகளை பாதுகாக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொள்ள வேண்டும்,' என கூடுதல் எஸ்.பி., அறிவுருத்தி உள்ளார்.திருப்பூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திலிருந்து சமீபத்தில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பின்னர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அனைத்து நகை மற்றும் அடகு கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடை உரிமையாளர்கள் செய்ய வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். நீலகிரி போலீஸ் சார்பில், அடகு மற்றும் நகை கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஊட்டி சிறுவர் மன்றத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கூடுதல் எஸ்.பி., காசிவிஸ்வநாதன் பேசியதாவது:சமீபத்தில் சமவெளி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அந்த நிறுவனத்தில் சி.சி.டி.வி., காமிராக்கள் பொறுத்தப்படாததால் கொள்ளையர்களை பிடிப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

இதனால் அடகு மற்றும் நகை கடை உரிமையாளர்கள் தங்கள் உடமைகளை பாதுகாக்க அனை­த்து ஏற்பாடுகளையும் செய்துக்கொள்ள வேண்டும். கடைகளில் பாதுகாப்பை பலப்படுத்தி, சி.சி.டி.வி., கேமிராக்களை பொறுத்த வேண்டும். அப்போது தான் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் போலீசாருக்கு துப்பு கிடைக்கும். மேலும் தற்போது நவீன தொழில் நுட்பத்தில் பாதுகாப்பு சாதனங்கள் வந்துள்ளதால், அவற்­றை பயன்படுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யலாம். நகைகளை கொள்ளையடிக்க முயல்பவர்கள் கடைகளுக்கு ஏதாவது பொருள் வாங்க வருவது போல நோட்டமிடலாம். அது போல சந்தேகத்துக்குரிய வகையில் நடவடிக்கை உள்ளவர்கள் குறித்து கடை உரிமையாளர்கள் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். இவ்வாறு காசிவிஸ்வநாதன் பேசினார். கூட்டத்தில், டி.எஸ்.­பி., அசோக்குமார், இன்ஸ்பெக்டர்கள் விவேகானந்தன், மனோகரன் மற்றும் நகைகடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us