sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கள்ள ஓட்டு, ஆள் மாறாட்டம் முற்றிலும் தடுக்கப்படும்

/

கள்ள ஓட்டு, ஆள் மாறாட்டம் முற்றிலும் தடுக்கப்படும்

கள்ள ஓட்டு, ஆள் மாறாட்டம் முற்றிலும் தடுக்கப்படும்

கள்ள ஓட்டு, ஆள் மாறாட்டம் முற்றிலும் தடுக்கப்படும்


ADDED : அக் 12, 2011 02:59 AM

Google News

ADDED : அக் 12, 2011 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னூர் : குன்னூரில் நடந்த உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் ஆள்மாறாட்டம், கள்ள ஓட்டு உட்பட சர்ச்சைகள் கிளப்பப்பட்டன.குன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி, மாவட்ட ஊராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதி பின்பற்றுவது குறித்த கூட்டம், குன்னூர் ஆர்.டி.ஓ., காந்திமதி தலைமையில் நடந்தது.குன்னூர் பி.டி.ஓ.,சரவணன் பேசுகையில், ''வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

பூத் சிலிப்பில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் இருக்க கூடாது. ஆள்மாறாட்டம், தேர்தல் முறைகேடு நடந்தால் தேர்தல் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம்,'' என்றார்.கூட்டத்தில், நடந்த விவாதங்கள்;பர்லியார் ஊராட்சி தலைவர் வேட்பாளர் கலைச்செல்வன்; கரன்சி பகுதியில் உள்ள 200 வாக்காளர்கள் சுமார் 7 கி.மீ., தூரமுள்ள சிங்காரா ஓட்டு சாவடிக்கு சென்று ஓட்டளிக்க வேண்டியுள்ளதால் பலர் ஓட்டளிக்க வர தயங்குகின்றனர்; அவர்களுக்கு அரசின் சார்பில் வாகனம் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.ஊராட்சிகளின் உதவி இயக்குனர் மணி; ஓட்டுச் சாவடி மாற்றம் செய்வது இனிமேல் கடினம்; மனு எழுதி கொடுங்கள்; அடுத்த தேர்தலுக்குள் ஓட்டுச் சாவடியை மாற்ற முயற்சி செய்கிறோம்.வண்டிச்சோலை ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் சதீஷ்குமார்; எனது வார்டில் 30 பேரின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனு வழங்கியதில், 14 பேரின் பெயர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது; விடுப்பட்டவர்களும் ஓட்டளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.எடப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் ராஜூ; ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர் வேட்பாளர்கள் கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள்; இருப்பினும், அவர்கள் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் ஓட்டு சேகரித்து வருவதை தவிர்க்க வேண்டும்.உபதலை ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் சிதம்பரம்; பெரிய கரும்பாலம் பகுதியில் உள்ள வாக்காளர்கள் சுமார் 13 கி.மீ., தூரமுள்ள பழத்தோட்டம் வாக்குச் சாவடிக்கு சென்று ஓட்டளிக்க வேண்டியுள்ளதால், பலர் ஓட்டளிக்க வர தயங்குகின்றனர்; மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.உதவி இயக்குனர் மணி; பெரும்பாலான கிராமங்களில் குறுக்கு பாதை கண்டிப்பாக இருக்கும்; அந்த வழியை பயன்படுத்தி, ஓட்டுச் சாவடிக்கு போகலாம்.குன்னூர் டி.எஸ்.பி., மாடசாமி; பள்ளி மாணவர்கள் கூடும் இடங்களில் பிரசார வாகனத்தை ஓட்டியவாறு பிரசாரம் செய்யக் கூடாது. இரவு 10.00 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக் கூடாது என்றார்.






      Dinamalar
      Follow us