sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குறுமிளகு விலையில் வந்த ஏற்றத்தால் லாபம்

/

குறுமிளகு விலையில் வந்த ஏற்றத்தால் லாபம்

குறுமிளகு விலையில் வந்த ஏற்றத்தால் லாபம்

குறுமிளகு விலையில் வந்த ஏற்றத்தால் லாபம்


ADDED : அக் 12, 2011 03:00 AM

Google News

ADDED : அக் 12, 2011 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர் : குறுமிளகுக்கு தற்போது நல்ல விலை கிடைத்து வருவதால், கூடலூர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேயிலை, காபி தோட்­டங்­களில் ஊடுபயிராக குறுமிளகு பயிரிடப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அதிக விளைச்சல் காரணமாக குறுமிளகு விலை வெகுவாக குறைந்தது.

மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு கிலோ காய்ந்த குறுமிளகு 68 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை குறைவினால் விவசாயிகள் குறுமிளகு உற்பத்தியில் ஆர்வம் குறைந்து காணப்பட்டனர். போதிய பராமரிப்பு இல்லாததும், நோய் தாக்கியதாலும் குறுமிளகு உற்பத்தி வெகுவாக குறைய துவங்கியது; அதன் தேவையும் அதிகரித்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக இதன் விலை நாளுக்கு நாள் உயர துவங்கியது. கடந்த 6 மாதத்துக்கு முன் ஒரு கிலோ குறுமிளகு 230 ரூபாய் வரை விலை கிடைத்தது. தொடர் விலை உயர்வினால் தற்போது காய்ந்த குறுமிளகு கிலோ 330 ரூபாய்க்கு மேல் விலை கிடைக்க துவங்கியுள்ளது. இந்த விலை உயர்வு விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால், குறுமிளகு விவசாயத்தில் அதிக கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.குறுமிளகு வியாபாரிகள் கூறுகையில்,''குறுமிளகுக்கு உலக மார்க்கெட் பொருத்தே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்@பாது விலை அதிகரித்துள்ளது.தேவை அதிகம் என்பதால், மேலும் விலை அதிகரிக்கும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us