/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பேரிடர் ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பேரிடர் ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜன 24, 2024 11:50 PM

ஊட்டி : ஊட்டி தலையாட்டுமந்து அரசு துவக்கபள்ளியில், பேரிடர் ஒத்திகை விழிப்புணர்வுநிகழ்ச்சி நடந்தது.
நீலகிரி மாவட்டம், மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் நிறைந்து காணப்படுகிறது. சூறாவளி காற்று மற்றும் கனமழை பெய்யும் பட்சத்தில், அவ்வப்போது பேரிடர் ஏற்படுவது தொடர்கிறது.
பேரிடரின் போது, பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து தொடர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒருக்கட்டமாக, ஊட்டி தலையாட்டுமந்து அரசு துவக்கப்பள்ளியில், பேரிடர் ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஊட்டி தாசில்தார் சரவணகுமார் தலைமை வகித்தார்.
இதில், தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள், 'பேரிடர் நாட்களில், வீடுகள் இடிந்து இடிப்பாடுகளில் சிக்கியோரையும், மழை வெள்ளத்தில் அடித்து செல்வோர்; மண் சரிவின்போது மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்டு, எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது,' என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
இதில், மருத்துவம் மற்றும் கல்வி துறை அலுவலர்கள், மாணவர்கள் உட்பட பொதுமக்கள் திரளாக பங்கு பங்கேற்று பயனடைந்தனர்.