/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துாய்மை பணியில் பாரபட்சம் ; பந்தலுாரில் -சுகாதாரம் பாதிப்பு
/
துாய்மை பணியில் பாரபட்சம் ; பந்தலுாரில் -சுகாதாரம் பாதிப்பு
துாய்மை பணியில் பாரபட்சம் ; பந்தலுாரில் -சுகாதாரம் பாதிப்பு
துாய்மை பணியில் பாரபட்சம் ; பந்தலுாரில் -சுகாதாரம் பாதிப்பு
ADDED : மார் 19, 2025 08:06 PM

பந்தலுார்; பந்தலுாரில் குப்பைகளை முறையாக அகற்றாததால், சுகாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
நெல்லியாளம் நகராட்சியில், நிரந்தர துாய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த முறையிலான பணியாளர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சில துாய்மை பணியாளர்கள், குப்பைகளை முறையாக அகற்றாமல் விட்டு செல்கின்றனர். மேலும், துாய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றுவதில், பாரபட்சம் காட்டுவதாக புகார் உள்ளது. இதனால், சில இடங்களில் குப்பை அகற்றப்படாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
எனவே, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் நிலையை மாற்றி, அனைத்து இடங்களிலும் குப்பைகளை முறையாக அகற்றி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.