/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பள்ளியில் நோய் தடுப்பு விழிப்புணர்வு

ADDED : டிச 10, 2024 11:22 PM
கோத்தகிரி ; கோத்தகிரி ஒரசோலை அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். கட்டபெட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மீனாட்சி, கிராம செவிலியர் சசிகலா ஆகியோர் பங்கேற்று, 'ரத்தத்தில் இரும்பு சத்து குறைபாடு; மாத்திரை உட்கொள்ளுவதன் முக்கியத்துவம்; கை கழுவும் முறை மற்றும் ரண ஜன்னி தடுப்பூசியின் அவசியம்,' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாணவர்களுக்கு, இரும்பு சத்து மாத்திரை வழங்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளிக்கு விடுப்பு எடுக்காமலும், மரங்களை நேசிக்கும், ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவி தர்ஷினிக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்க கருத்தாளர் ராஜூ, பொன்னாடை போர்த்தி, பதக்கம் அணிவித்து பாராட்டினார். மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.