/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாடந்துறையில் வழிப்பறி; தலைமறைவு குற்றவாளி கைது
/
பாடந்துறையில் வழிப்பறி; தலைமறைவு குற்றவாளி கைது
ADDED : அக் 28, 2024 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் : கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அசைனார். இவர் கடந்த மே, 31ம் தேதி தனது காரில், கூடலுாரை கடந்து தேவர் சோலை வழியாக சுல்தான்பத்தேரி நோக்கி சென்றார். பாடந்துறை அருகே காரை நிறுத்தி சிலரிடம் பத்தேரி பகுதிக்கு செல்ல வழி கேட்டுள்ளார்.அவர்கள் தவறான வழியை கூறியதுடன், காரை பின் தொடர்ந்து சென்று வழிமறித்து, அவரிடமிருந்து விலை உயர்ந்த மொபைல் போன் மற்றும் பணத்தை பறித்து சென்றனர். இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய குற்றவாளியான சியாபுதீன்,40, தலைமறைவாக இருந்தார். தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.

