ADDED : ஏப் 17, 2025 09:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி, ; கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி, சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு, கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளன. குறிப்பாக 'பார்க்கிங்' வசதி இல்லை. இந்நிலையில், சமீப காலமாக நகர சாலையில், கால்நடைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இதனால் வாகனங்கள் சென்று வருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விழுந்து காயமடைந்து வருகின்றனர். பெரும்பாலான நேரங்களில், கால்நடைகள் சாலையில் படுத்து விடுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.