/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரயில் பெட்டி பராமரிப்பு மைய பணி இரு மாதங்களில் நிறைவு பெறும் கோட்ட மேலாளர் தகவல்
/
ரயில் பெட்டி பராமரிப்பு மைய பணி இரு மாதங்களில் நிறைவு பெறும் கோட்ட மேலாளர் தகவல்
ரயில் பெட்டி பராமரிப்பு மைய பணி இரு மாதங்களில் நிறைவு பெறும் கோட்ட மேலாளர் தகவல்
ரயில் பெட்டி பராமரிப்பு மைய பணி இரு மாதங்களில் நிறைவு பெறும் கோட்ட மேலாளர் தகவல்
ADDED : அக் 12, 2025 10:59 PM
பாலக்காடு:பாலக்காடு டவுன் ரயில்வே ஸ்டேஷனில் நடக்கும் ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையத்தின் பணிகள், ஜன., மாதம் நிறைவடையும்.
பாலக்காடு கோட்ட மேலாளர் மதுக்கர் ரவுத்து கூறியதாவது:
பாலக்காடு டவுன் ரயி ல்வே ஸ்டேஷனில் நடக்கும் ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையத்தின் (பிட்லைன்) பணிகள், ஜனவரி மாதம் நிறைவு பெறும். 'பிட்லைன்' செயல்பாட்டுக்கு வந்தால் கூடுதல் ரயில்கள் பாலக்காட்டில் இருந்து இயக்க முடியும். அதேபோன்று, வந்தே பாரத், மெமு ரயில்கள் உள்ளிட்ட, கூடுதல் ரயில்கள் அனுமதிக்க ரயில்வே வாரியத்திடம் கேட்ப்போம்.
பாலக்காட்டில் இருந்து எர்ணாகுளத்துக்கு செல்லும் மெமு ரயிலின் பெட்டிகள் எண்ணிக்கையை 8ல் இருந்து 12 ஆக உயர்த்தும் திட்ட அறிக்கை ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பித்துள்ளோம். அதற்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
சிறந்த பயண வசதியும், பாதுகாப்பும் உறுதி செய்யும் எல்.எச்.பி., பெட்டிகள் பாலக்காடு கோட்டத்தின் கீழ் உள்ள கூடுதல் ரயில்களில் நிறுவப்படும். இதற்கான திட்ட அறிக்கையும் சமர்ப்பித்துள்ளோம். பாலக்காடு கோட்ட ஊழியர்களின் முயற்சியின் விளைவாக, மிகவும் மதிப்புமிக்க விருதான 'ஜெனரல் மேனேஜர்ஸ் இன்டர் டிவிஷனல் ஓவரால் எபிசியன்சி ஷீல்ட்' கிடைத்துள்ளது.
துாய்மை, ரயில்வே ஸ்டேஷன் பராமரிப்பு, பயணிகள் சேவை, தொழில்நுட்ப சிறப்பம்சம் மற்றும் புதிய யோசனைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றிற்காக பாலக்காடு கோட்டம், 10 கேடயங்களை பெற்றது. பாலக்காடு கோட்டம் எரிசக்தி சேமிப்பு உள்ளிட்ட துறைகளில் சிறந்த சாதனைகள் படைத்துள்ளது. இவ்வாறு, அவர் கூறி னார்.