ADDED : அக் 14, 2025 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்;குன்னுார் கரோலினா தேயிலை தோட்ட பகுதிகளில் மாலை நேரத்தில் உலா வரும் சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குன்னுார் கரோலினா பகுதியில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இங்கு இரவு நேரத்தில் வந்த சிறுத்தை தற்போது மாலை நேரத்தில் உலா வருகிறது. இதனால் தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை பறிக்க செல்ல முடியாமல் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இரவில் கரோலினா சாலையில் செல்லும் மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். மக்கள் கூறுகையில், 'வனத்துறையினர் கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என்றனர்.