/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரியில் தி.மு.க., வீர வணக்க பொதுக்கூட்டம்
/
கோத்தகிரியில் தி.மு.க., வீர வணக்க பொதுக்கூட்டம்
ADDED : ஜன 28, 2025 07:04 AM
கோத்தகிரி : கோத்தகிரியில் தி.மு.க., சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
கோத்தகிரி ஒன்றிய செயலாளர் கண்ணன் வரவேற்றார். மாணவரணி மாவட்ட தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். அரசு கொறடா ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் முபாரக், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேச்சாளர்கள் பவானி கண்ணன், ரஜினி, செந்தில் வில்லவன் ஆகியோர், 'மாநில அரசின் மருத்துவ மேம்பாட்டு சாதனைகள், மகளிர்; மாணவர்களுக்கான திட்டங்கள், மருத்துவ காப்பீட்டு திட்டம்,' குறித்து பேசினர்.
தொடர்ந்து, மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர். பேரூராட்சி செயலாளர் காளிதாஸ் நன்றி கூறினார்.

