/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'முதுமையில் பெற்றோரை கைவிடாதீர்கள்': இளைய தலைமுறையினருக்கு 'அட்வைஸ்'

ADDED : ஜன 29, 2025 10:44 PM
குன்னுார் ; குன்னுார் பாலகிளவா முதியோர் இல்லத்தில் கல்லுாரி மாணவியர் உதவிகள் வழங்கினர்.
குன்னுார் பிராவிடன்ஸ் கல்லுாரி பொருளாதார துறை சார்பில், முதியோர் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பாலகிளவா முதியோர் இல்லத்தில் நடந்தது. பேராசிரியர்கள் மாணவியர் அங்குள்ளவர்களுக்கு கேக், பிஸ்கட், உடைகள் வழங்கினர்.
தொடர்ந்து, இளைய தலைமுறையினர் முதியவர்களுடன் நேரத்தை செலவிடுவது; சமூக பொறுப்பு முக்கியத்தும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முதியோரை பராமரிப்பதன் முக்கியத்துவம், பெற்றோரை முதுமையில் கைவிடாமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து, மாணவியர் மத்தியில் பேராசிரியர்கள் விளக்கினர்.
முதியோர் இல்லம் குறித்து சிஸ்டர்கள் பேசினர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ஹேமலதா, டாக்டர் இந்துமதி செய்திருந்தனர்.