/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 5,78,961 வாக்காளர்கள் உள்ளதாக தகவல்
/
நீலகிரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 5,78,961 வாக்காளர்கள் உள்ளதாக தகவல்
நீலகிரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 5,78,961 வாக்காளர்கள் உள்ளதாக தகவல்
நீலகிரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 5,78,961 வாக்காளர்கள் உள்ளதாக தகவல்
ADDED : அக் 29, 2024 08:45 PM
ஊட்டி : நீலகிரியில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது; ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் ஜன., 1ம் தேதியை புதிய வாக்காளர்களுக்கு, 18 வயது பூர்த்தி அடைந்த நாளாக வைத்து புதிய பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.
அதற்கு முன்பு பழைய வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு வசதியாக, மாநிலம் முழுவதும் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் லட்சுமி பவ்யா வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
தொகுதி வாரியாக வாக்காளர்கள் விபரம்
ஊட்டி சட்டசபை தொகுதியில், '93,942 ஆண் வாக்காளர்கள் ; 1,02,805 பெண் வாக்காளர்கள் ; மூன்றாம் பாலினத்தவர் 11 பேர்,' என, மொத்தம், 1,96,758 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கூடலூர் சட்டசபை தொகுதி , '93,722 ஆண் வாக்காளர்கள் ; 99,546 பெண் வாக்காளர்கள் ; மூன்றாம் பாலினத்தவர், 4 பேர்,' என, மொத்தம், 1,93,272 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
குன்னுார் சட்டசபை தொகுதியில், '89,338 ஆண் வாக்காளர்கள்; 99,589 பெண் வாக்காளர்கள்; மூன்றாம் பாலினத்தவர், 4 பேர்,' என, 1,88,931 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மூன்று சட்டசபை தொகுதியில் மொத்தம் , 5,78,961 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை விட தற்போது, 2,119 பேர் கூடுதலாக உள்ளனர்.
நான்கு நாட்கள் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் பட்டியலில் ஏற்கனவே உள்ள பதிவுகளை நீக்குதல், திருத்தம், இடம் மாற்றம் செய்தல், ஆதார் எண் இணைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு இன்று(நேற்று) செவ்வாய் கிழமை முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. அதற்கு படிவங்கள், 6, 6-பி, 7, 8, ஆகியவற்றை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட, 690 ஓட்டு சாவடிகள் அமைந்துள்ள அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும் வாக்காளர்களிடம் மனுக்களை பெற அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசு விடுமுறையை தவிர்த்து, மற்ற வேலை நாட்களில் காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை விண்ணப்பங்களை நேரில் சமர்ப்பிக்கலாம்.
கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ''வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நவ., மாதம் 16,17,23,24 ஆகிய தேதிகளில் அனைத்து ஓட்டு சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
ஓட்டு சாவடிக்கு நேரில் சென்று மனு கொடுக்க முடியாதவர்கள் www.voters.eci.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாகவோ, voters helpline என்ற மொபைல் செயலி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
மேலும் , ஓட்டு சாவடி நிலை அலுவலர்களிடம் விவரங்களை சமர்ப்பித்து செயலி மூலமாகவும் விண்ணப்பங்களை பதிவேற்ற செய்யலாம்.
வரும் ஜன., 1ம் தேதி அன்று 18,வயது பூர்த்தி அடைந்த, 2006 டிச., 31க்கு முன்னதாக பிறந்த நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இந்த சிறப்பு சுருக்க திருத்த காலத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இதை தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல், 2025ம் ஆண்டு ஜன., 6ம் தேதி வெளியிடப்படும்,'' என்றார்.