/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; 5,33,076 வாக்காளர்களுக்கு இடம் ;56,091 பேர் நீக்கம்
/
ஊட்டியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; 5,33,076 வாக்காளர்களுக்கு இடம் ;56,091 பேர் நீக்கம்
ஊட்டியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; 5,33,076 வாக்காளர்களுக்கு இடம் ;56,091 பேர் நீக்கம்
ஊட்டியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; 5,33,076 வாக்காளர்களுக்கு இடம் ;56,091 பேர் நீக்கம்
ADDED : டிச 20, 2025 09:12 AM
ஊட்டி: ஊட்டியில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 5,33,076 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்; 56,091 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
மத்திய தேர்தல் ஆணைய அறிவுரையின் படி, சிறப்பு தீவிர திருத்தம், கடந்த நவ., மாதம், 4ம் தேதி துவங்கியது. நீலகிரியில் ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய மூன்று தொகுதிகளில் இந்த சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்தன. முதற்கட்டமாக தயார் செய்யப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் லட்சுமி பவ்யா தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட் ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
5,33,076 வாக்காளர்களுக்கு இடம் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது, மாவட்டத்தில் அக்., மாதம், 27ம் தேதி வரை இருந்த மொத்தம், 5,89,167 வாக்களார்களுக்கும் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன.
அதில், 5,33,076 வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை திரும்ப வழங்கியுள்ளனர். இவர்களில், 'ஆண்கள், 2,54,759 பேர்; பெண்கள், - 2,78,299 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள், 18 பேர்,' என, மொத்தம், 5,33,076 வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
56.091 வாக்காளர்கள் நீக்கம் அதில், 'திரும்ப பெறப்படாத கணக்கெடுப்பு படிவங்களில், கண்டறிய முடியாத வாக்காளர்கள், 5,863 பேர்; நிரந்தரமாக இடம்பெயர்ந்த வாக்காளர்கள், 27,939 பேர்; இறந்த வாக்காளர்கள், 18,975 பேர்; இரட்டைப்பதிவுள்ள வாக்காளர்கள், 3,292 பேர் மற்றும் இதர வாக்காளர்கள், 22 பேர்,'என, மொத்தம், 56,091 வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை.
வாக்காளர்கள், 19ம் தேதி (நேற்று) முதல் ஜன., மாதம், 18ம் தேதி வரை நடக்கவுள்ள காலகட்டத்தில் உரிமைக்கோருதல் மற்றும் மறுப்புரை தெரிவித்தல் போன்றவற்றை, உரிய படிவங்கள் வாயிலாக, தொடர்புடைய ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம். மேலும், உரிமை கோரல் மற்றும் மறுப்புரை தெரிவித்தல் காலத்தில் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடக்கும்.
736 ஓட்டுச்சாவடி மையங்கள் நீலகிரி மாவட்டத்தில் ஓட்டுச்சாவடி மறுசீரமைத்தல் பணிக்கு முன்னராக, 690 ஓட்டுச்சாவடி மையங்கள் இருந்தன. ஓட்டுச்சாவடி மறுசீரமைத்தலின் போது புதிதாக, 49 ஓட்டுச்சாவடி மையங்கள் உருவாக்கப்பட்டன. 3 ஓட்டுச்சாவடி மையங்கள். ஏற்கனவே இருந்த ஓட்டுச்சாவடி மையங்களுடன் இணைக்கப்பட்டன. ஓட்டுச்சாவடி மறுசீரமைத்தல் பணிக்கு பின்னர் தற்போது மொத்தம், 736 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. மாவட்டத்தில் நடந்த சிறப்பு தீவிர திருத்த பணியில், 4,377 அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பிப்.,16ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

