/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிராமங்களை தனி ஊராட்சியாக அறிவிக்க பழங்குடி மக்கள் முற்றுகை
/
கிராமங்களை தனி ஊராட்சியாக அறிவிக்க பழங்குடி மக்கள் முற்றுகை
கிராமங்களை தனி ஊராட்சியாக அறிவிக்க பழங்குடி மக்கள் முற்றுகை
கிராமங்களை தனி ஊராட்சியாக அறிவிக்க பழங்குடி மக்கள் முற்றுகை
ADDED : டிச 20, 2025 09:13 AM

ஊட்டி: 'தாங்கள் வாழும் பகுதிகளை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும்,' என, வலியுறுத்தி பழங்குடி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நீலகிரி மாவட்டம், ஆனைகட்டி, சிறியூர் மற்றும் சொக்கநள்ளி ஆகிய பழங்குடியின கிராமங்கள் இதுவரை, எப்பநாடு, கூக்கல் மற்றும் கடுநாடு ஊராட்சிகளுக்கு உட்பட்டதாகும்.
இந்த கிராம மக்கள், அந்தந்த ஊராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வேண்டும் எனில், 90 முதல், 160 கி.மீ., தொலைவிற்கு சென்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் ஊராட்சிகள் பிரிக்கப்பட்ட நிலையில், இந்த மூன்று பழங்குடியின கிராம மக்கள், கூடுதல் ஆட்சியர் நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்று, 'தங்களது கிராமங்களை மாவனல்லா ஊராட்சியாக பிரிக்க வேண்டும். வாழைதோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஹேப்பி ஹோம் பகுதியில், ரேஷன் கடை, அரசு பள்ளி, நுாலகம், சமுதாய கூடத்துடன், போக்குவரத்து வசதியுடன் உள்ளதால், வாழைத்தோட்டம் ஊராட்சி மன்றம் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என, வலியுறுத்தினர்.இதுவரை பழங்குடியின மக்களின் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்காத நிலையில், மக்கள் ஒருங்கிணைந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அதன் அலுவலர்கள் பேச்சுவார்த்தைக்கு பின் மனு அளித்து சென்றனர்.

