/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுபான்மையருக்கு ரூ.10.15 லட்சம் நலத்திட்ட உதவி
/
சிறுபான்மையருக்கு ரூ.10.15 லட்சம் நலத்திட்ட உதவி
சிறுபான்மையருக்கு ரூ.10.15 லட்சம் நலத்திட்ட உதவி
சிறுபான்மையருக்கு ரூ.10.15 லட்சம் நலத்திட்ட உதவி
ADDED : டிச 20, 2025 09:13 AM

ஊட்டி: ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறுபான்மையர் தின உரிமைகள் தினவிழாவில், 87 பயனாளிகளுக்கு, 10.15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தொடர்ந்து, கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் சார்பில், 45 பயனாளிகளுக்கு. 8.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உதவித்தொகை; கிறிஸ்துவ தேவாலயங்களில் பணி புரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற, 15 பயனாளிகளுக்கு அடையாள அட்டை; 27 பயனாளிகளுக்கு, தலா 5,000 வீதம் 1.35 லட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்கள்,' என, மொத்தம் 87 பயனாளிகளுக்கு, 10.15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தொடர்ந்து, அவர் பேசியதாவது:
தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி, விழா கொண்டாடப்படுகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மாநில முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில், சிறுபான்மையினர் பயன்பெறும் வகையில், தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார். மாநிலத்தில் சிறுபான்மையினர் நலனுக்காக, தனி இயக்குனரகம் செயல்படுகிறது.
இதன் மூலம், மதவழி சிறுபான்மையினர் என அங்கீகரிக்கப்பட, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள்,புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் உட்பட பல்வேறு மதத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு தனியாக நலவாரியம் செயல்படுத்தப்பட்டு, நீலகிரி மாவட்டத்தில், 535 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு நலவாரிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பாரத பிரதமரின் புதிய, 15 அம்ச திட்ட பணிகள் வாயிலாக, சிறுபான்மையினருக்கு மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை உறுதி செய்யும் விதமாக அனைத்து துறை அலுவலகப் பணிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.
இதில், கலெக்டர் லட்சுமி பவ்யா, ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ், சிறுபான்மையினர் நல அலுவலர் லோகநாயகி உட்பட அரசு துறை அலுவலர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.

