/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பருகும் மதுவில் கருகும் உயிர்; நீலகிரி போலீசார் விழிப்புணர்வு
/
பருகும் மதுவில் கருகும் உயிர்; நீலகிரி போலீசார் விழிப்புணர்வு
பருகும் மதுவில் கருகும் உயிர்; நீலகிரி போலீசார் விழிப்புணர்வு
பருகும் மதுவில் கருகும் உயிர்; நீலகிரி போலீசார் விழிப்புணர்வு
ADDED : ஏப் 14, 2025 09:41 PM
ஊட்டி; போதை பழக்கத்திற்கு எதிராக, சுவரொட்டிகள் மூலம் மதுவிலக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வை துறை சார்பில், 'போதை இல்லா நீலகிரி, அதுவே நம் இலக்கு,' என்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி சமீபத்தில், ஊட்டியில் துவக்கப்பட்டது. ஊட்டியில் துவங்கிய போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.
அதில், 'போதை மருந்துகளின் கெடுதல்; போதை இல்லா வாழ்க்கையின் நன்மைகள் உள்ளிட்ட தலைப்புகளில் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், போதை தடுப்பு குறித்து உதவி தேவைப்படுபவர்கள், 10581, 9489380581, 9498410581 மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர, போதை பழக்கம் தடுப்பு குறித்து மாவட்டம் தோறும் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நடன கலைஞர்கள் மூலம் நாடகம் நடத்தி பாட்டு பாடி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். முக்கிய பகுதிகளில் சுவரொட்டி ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.