/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பன்றி இறந்து கிடந்த தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம்; நகராட்சியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ADDED : நவ 04, 2024 09:44 PM
பந்தலுார் ; பந்தலுாரில் பன்றி இறந்து கிடந்த தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதால் மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பந்தலுாரில் நெல்லியாளம் நகராட்சி சார்பில், இந்திரா நகர் மற்றும் இன்கோ நகர் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய, மேட்டுப்பாங்கான பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்திரா நகர் பகுதிக்கு விநியோகம் செய்த, குடிநீர் கடும் துர்நாற்றம் வீசியதுடன் குடிநீரில் முடிகளும் வந்துள்ளன. இது குறித்து கிராம மக்கள் நகராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. நேற்று குடிநீர் தொட்டியை மக்கள் நேரடி ஆய்வு செய்தனர். அப்போது தொட்டியின் அடிப்பகுதியில் முள்ளம்பன்றியின் உடல் கிடந்தது தெரிய வந்தது. மேலும், பன்றியின் உடலில் இருந்து, புழுக்கள் வெளியாகி வந்ததும் பொதுமக்கள் பார்த்தனர். பொதுமக்கள் நெல்லியாளம் நகராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, 'குடிநீர் வினியோகம் செய்யும் தொட்டியை முழுமையாக துார்வாரி சுத்தம் செய்ய வேண்டும்; குடிநீர் தொட்டி மூடியை திறக்க முடியாத நிலையில், விலங்கை கொன்று தொட்டியில் இட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத குடிநீர் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தினர்.
'மாவட்ட கலெக்டர் கூட்டத்திற்கு, அதிகாரிகள் சென்று உள்ளதால், அவர்கள் வந்தவுடன் பேசலாம்,' என, நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர். இதனை ஏற்று மக்கள் கலைந்து சென்றனர்.