/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விதிமுறைகளை பின்பற்றாத ஓட்டுனர்கள்; வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால் சிக்கல்

UPDATED : செப் 23, 2025 10:59 PM
ADDED : செப் 23, 2025 08:55 PM

பந்தலுார்,; தாலுகா தலைநகரான பந்தலுாரில் பல்வேறு அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த அலுவலகங்கள், வங்கிகள், அரசு தலைமை மருத்துவமனை, நீதிமன்றம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம்- கேரளா இணைப்பு சாலையாக உள்ளதால், இரு மாநில வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கிறது.
இந்நிலையில், பஜார் பகுதி சாலையின் இரண்டு பக்கங்களிலும் ஆக்கிரமிப்புகள் தினசரி அதிகரித்து வரும் நிலையில், சாலை குறுகலாக மாறி வாகனங்கள் வந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
மேலும், சாலைகளில் வாகனங்களை நிறுத்தி கொள்வதால், பஸ் உள்ளிட்ட அவசர தேவைக்கு செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் வாகன ஓட்டுனர்கள் விதிமீறி வாகனங்களை நிறுத்துவதால், மருத்துவமனைக்கு அவசர தேவைக்காக செல்லும் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். பந்தலுார் பஜார் பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில், ஈடுபடாததால் பிரச்னைகள் நடக்கிறது.
எனவே, பந்தலுார் பகுதியில் போலீசாரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.