தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/வறட்சியின் தாக்கம் அதிகரிப்பு: குன்னூரில் பரவும் வனத்தீ

வறட்சியின் தாக்கம் அதிகரிப்பு: குன்னூரில் பரவும் வனத்தீ

வறட்சியின் தாக்கம் அதிகரிப்பு: குன்னூரில் பரவும் வனத்தீ


ADDED : பிப் 20, 2024 10:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2024 10:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்;குன்னுார் ரயில்வே குடியிருப்பில் ஏற்பட்ட வனத்தீயை தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.

குன்னுார் பகுதிகளில் வறட்சியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், பல இடங்களிலும் வனத்தீ ஏற்பட்டு வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குன்னுார் பந்துமை, வண்டிச்சோலை உட்பட, 10 இடங்களில் ஏற்பட்ட வனத் தீயை தீயணைப்புத்துறையினர் அணைத்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குன்னுார் ரயில் நிலைய குடியிருப்பு அருகே சோலை பகுதியில் வனத் தீ ஏற்பட்டது. தகவலின்பேரில் நிலைய அலுவலர் குமார் தலைமையில் முன்னணி தீயணைப்பாளர்கள் சுப்ரமணி, கண்ணன் உட்பட தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர். குன்னுார் மலைப்பாதைகளில் வறட்சியின் தாக்கத்தால் வனத்தீ ஏற்படும் அபாயம் உள்ளதால் தீத்தடுப்பு கோடுகள் அமைக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us