ADDED : ஜூன் 25, 2026 10:24 PM
குன்னுார்: குன்னுாரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
குன்னுாரில் டவுன் போலீசார் சார்பில், போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. குன்னுார் இன்ஸ்பெக்டர் கண்ணைய்யன் துவக்கி வைத்தார். குன்னுார் ஜோசப் கான்வென்ட் பள்ளி மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வந்தனர். புளூ ஹில்ஸ் பகுதியில் துவங்கிய பேரணி மவுன்ட் ரோடு வழியாக தீயணைப்பு நிலையம் வரை சென்றது. எஸ்.எஸ்.ஐ., பண்ணாரி மற்றும் சந்திரன், மற்றும் சுகன்யா உள்ளிட்ட காவல்துறையினர் பேரணியை வழிநடத்தினர்.
* அருவங்காடு, மத்திய அரசு கல்வி நிறுவனமான கே.வி., பள்ளியில் நடந்த பேரணியை பள்ளி முதல்வர் அருண் ராஜா துவக்கி வைத்து போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். அருவங்காடு காவல்துறையினர் போதை பொருள் தீமை குறித்து பேசினர். ஒருங்கிணைப்பாளர் அமுதா, சந்திப், விளையாட்டு ஆசிரியர் அருள் வேந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.
