/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுார் பகுதி பள்ளிகளில் போதை ஒழிப்பு உறுதிமொழி
/
பந்தலுார் பகுதி பள்ளிகளில் போதை ஒழிப்பு உறுதிமொழி
ADDED : ஆக 11, 2025 08:36 PM

பந்தலுார்; பந்தலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், நடந்த போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் வரவேற்றார்.
தாசில்தார் சிராஜுநிஷா தலைமை வகித்து, 'போதை பழக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மாணவர்கள் போதை ஒழிப்புக்கு ஆதரவாக களம் இறங்க வேண்டியதன் அவசியம்,' குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து, போதைக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.நிகழ்ச்சியில், வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், வி.ஏ.ஓ.,க்கள் மாரிமுத்து, அசோக்குமார், உதவியாளர் சிவக்குமார், பள்ளி ஆசிரியர்கள் தண்டபாணி, முர்ஜித் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் சித்தானந்த் நன்றி கூறினார்.
-* பந்தலுார் டியூஸ் மெட்ரிக் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் சுசீந்திரநாத் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமை வகித்து, போதை பழக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, விளக்கி பேசினார்.
தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் சுகாதாரப் பணியாளர்கள் பங்கேற்றனர்.